சென்னையில் பருவமழை பாதிப்பு..!! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்ட உத்தரவு..!! அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை..?
ஒவ்வொரு ஆண்டும் பருவமழையானது தீவிரம் காட்டி வருகிறது.., கடந்த ஆண்டு கூட வரலாறு காணாத மழை பெய்தது., அதில் சென்னையின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.. ஆனால் இந்த அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது..
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., அமைச்சர் கே.என்.நேரு, மற்றும் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கோட்டம் சென்னை வெள்ளை மாளிகையில் (RipponBuilding)ல் நடைபெற்றது.. சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துறை சார்ந்த அதிகாரிகள், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், வருவாய்த்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மின்சார வாரியம், ரயில்வே துறை, பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்..
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்., “முடிந்த அளவிற்கு சாலைகள் மற்றும் பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.. ஒருவேளை அப்படி தண்ணீர் தேங்கினாலும் அதனை உடனே அகற்ற தேவையான மோட்டார் பம்புகள் போன்றவற்றை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.. தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களை முன்னரே முகாம்களில் தங்க வைக்க வேண்டும்..
அங்கு அவர்களுக்கு தேவையான உணவு., உடை போன்றவற்றை கொடுத்திட வேண்டும். மழை வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு செல்வதற்கான படகுகள். அனைத்து அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு முன்னதாகவே செய்திருக்க வேண்டும்., பருவமழை தீவிரம் தொடங்குவதற்கு முன்னரே நாம் அனைத்தையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்..
மழைகாலத்தில் பெரிதுமாக பாதிகப்படுவது மின்சாரம்., மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ அல்லது சாலைகளில் மரங்கள் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தாலோ மின்சாரா வாரியத்திற்கு தகவல் தெரிவிக்பட்ட அரைமணி நேரத்திற்குள் அங்கு சென்று இருக்க வேண்டும்.. அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்கள் தொகுதிக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு அவற்றை செய்து கொடுக்க வேண்டும்.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால் அவற்றை சரி செய்து கொடுக்க வேண்டியாது நமது கடமை என கூறியுள்ளார்..
மேலும் சென்னையில் பெரும்பாலும் மழை வெள்ளைத்தால் பாதிக்கப்படும் 200 வார்டுகளில் 1௦௦௦ தற்காலிக பணியார்களை சேர்த்து வேலை செய்யவேண்டும்., 388 அம்மா உணவகங்களில் இருந்து உணவகளை தாயார் செய்து முகாமிற்கு கொண்டு செல்லும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருபதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறே பேசினார்..
கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் (மத்திய சென்னை), டாக்டர் கலாநிதி வீராசாமி (வட சென்னை), தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), சசிகாந்த் செந்தில் (திருவள்ளூர்), துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஆர்.டி.சேகர், மயிலை த.வேலு, பரந்தாமன், ஜெ.கருணாநிதி, நா.எழிலன், ஐட்ரீம் மூர்த்தி, வெற்றி அழகன், ஜே.ஜே.எபினேசர், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, கே.பி.சங்கர், கா.கணபதி, ஜோசப் சாமுவேல், அசன் மவுலானா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய் உள்ளிட்ட பல்வேறுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..