பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களை தட்டி தூக்கிய இந்திய வீரர்கள்..!!
பாராலிம்பிக் போட்டியில் ஆடவர்களுக்கான F51 கிளப் எறிதல் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்களான தரம்பிர் தங்கமும், பிரனவ் சூர்மா வெள்ளியும் வென்று அசத்தியுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில், ஆடவர்களுக்கான F51 கிளப் த்ரோ பிரிவில், இந்திய வீரர் தரம்பீர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பந்தினை 34.92 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறிந்து, ஆசிய சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார். அதேபோட்டியில் சக இந்திய வீரரான பிரனவ் சர்மா, 34.59 மீட்டர் தூரத்திற்கு பந்தினை வீசி, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
மேலும் ஆடவர்களுக்கான வில்வித்தை போட்டியில், இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் என இரண்டு போட்டிகளிலும் சேர்த்து, இந்தியர் ஒருவர் வில்வித்தை பிரிவில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
தற்போது வரை இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என மொத்தம், 24 பதக்கங்களுடன் 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 62 தங்கம் உட்பட 135 பதக்கங்களுடன் சீனா முதலிடத்திலும், 33 தங்கம் உட்பட 74 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், 25 தங்கம் உட்பட 63 பதக்கங்களுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..