அமித்ஷா சபதம்.. வேலையை ஆரம்பித்த பாதுகாப்பு படையினர்.. 6 நக்சல் சுட்டுக் கொலை..!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியில், மாவோயிஸ்டுகளை அழிப்பது தொடர்பாக, முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2026-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இவரது இந்த பேட்டியை தொடர்ந்து, மாவோயிஸ்டுகளை அழிக்கும் முயற்சியில், அதிரடி படையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில், மாவோயிஸ்டுகளின் ஊடுருவல் இருப்பதாக, ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர், தீவிர தேடுதல் வேட்டையின் ஈடுபட்டனர். அப்போது, இருதரப்புக்கும் இடையே, கடும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில், 6 மாவோயிஸ்டுகள், சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டு பேர், படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.