உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 7 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்ததுள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்றது.இப்போட்டியில் மொத்தம் 60 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில், 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டர் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா ஜோடி தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.
அதேபோல் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இறுதிப்போட்டியில் அனிஷ் பன்வாலா, குர்பிரீத் சிங், பாவேஷ் ஷெகாவத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, ஜெர்மன் அணியிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
இந்த உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு 7 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது.
Discussion about this post