மார்ச் 27-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது. இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் மார்ச் 27-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.