வங்கதேசம் சுற்றுப்பயணத்தை இந்திய கிரிக்கெட் அணி மேற்கொண்டுள்ளது. மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த தொடரில் நேற்று முதல் ஒரு நாள் தொடரை தொடங்கியது.
முதலில் பாட்டிங்க ஆடிய இந்தியா அணி வங்கதேச பந்துவீச்சாளர்கள் சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆட்டம் தொடங்கிய முதலே தடுமாற்றத்தை கொடுத்தனர். சொற்ப ரன்களில் தவான் வெளியேற நிதானமாக ஆடிய ரோஹித் 27 ரன்களில் வெளியேறினார். பின்னர் நட்சத்திர வீரர் விராட் கோலியும் விரைவாக வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ஒருவர் பின் ஒருவராக வெளியேறிய நிலையில் கே.எல்.ராகுல் மட்டும் 73 ரன்களுடன் வெளியேறி தனியாக இந்தியா அணியை தாங்கிப்பிடித்தார்.
இறுதியில் இந்தியா அணி 41.2 ஓவர்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 186 ரன்களுக்கு சுருண்டது. சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்களை எடுத்து அசத்தினார். 187 ரன்களை இலக்காக வைத்து களம் இறங்கிய வங்கதேச அணி இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து விக்கெட்களை இழந்து தவித்து வந்தது பிறகு லீட்டோன் தாஸ் மற்றும் கேப்டன் சாகிப் அல் ஹசன் இருவரின் நிதான ஆட்டத்தால் இலக்கை நெருங்கியது. இருப்பினும் வாஷிங்கடன் சுந்தர் இருவரையும் வெளியேற்ற 136 க்கு 9 விக்கெட்களை இழந்தது. இந்தியா அணி ஒரே ஒரு விக்கெட்டை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர் ஷிப் அமைத்த மெஹதி ஹாசனின் அசாத்திய ஆட்டத்தை தடுத்து நிறுத்த தவறியது. நோபால், கேட்ச் என்ற அணைத்து வாய்ப்புகளையும் இழந்து வங்கதேச அணியிடம் தோல்வியை தழுவியது.
ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் கே.எல்.ராகுல் கேட்சை விட்டது மேட்சிங் மொத்த முடிவையும் தலைகீழாக மாற்றியது. ஆட்டத்தின் இறுதியில் கூட ஒரு யார்கள் பந்தை வீசாதது என் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் முறையிட்டு வருகின்றனர்.