நடிகர் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாகும் என்று அறிவித்ததோடு சரி அதைத்தொடர்ந்து எந்த ஒரு அப்டேட்டையும் அப்படக்குழு வெளியிடாமல் இருந்து வருகிறது இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் வினோத் பேட்டி ஒன்றில் அஜித்தின் கதாபாத்திரத்தை பற்றி கூறியுள்ளார்.
வாரிசு படத்தின் அப்டேட்ட்கள் அடுக்கடுக்காக வரும் நிலையில் துணிவு படத்தின் அப்டேட்க்கள் மட்டும் ஏனொ பாதுகாக்கப்பட்டு வருகிறது. படத்தின் ரிலீஸ்க்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் படத்தின் முதல் பாடலே இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதற்கு அஜித் ரசிகர்களே அதிருப்தியில் உள்ளனர் இந்நிலையில் துணிவு இயக்குனர் எச்.வினோத் அளித்த பேட்டி ஒன்றில், துணைவி என்பது அயோக்கியர்களின் ஆட்டமாக இருக்கும் துணிவு படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தை பற்றி கேட்காதிர்கள் வில்லன் கதாபாத்திரம் என்றால் மங்காத்தா போன்று இருக்குமா என்று பல கற்பனைகள் தொடங்கிவிடும் என்று தெரிவித்தார்.
மேலும் துணைவி படத்தை பற்றி கூறுகையில், துணிவு படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் படத்தின் ட்ரைலரை கவனமாக பார்த்துவிட்டு வர வேண்டும் இந்த படத்திற்காக வங்கி போன்று செட் தேவைப்பட்டதால் அமைக்கப்பட்டது அதனை அனைவரும் வங்கி கொள்ளை என்று கூறுகின்றனர். இது வங்கி கொள்ளையை மையமாக கொண்ட கதையா என்றால் அதற்க்கான பதில் தற்போது என்னிடம் இல்லை என்றும் வாரிசு மற்றும் துணைவி இரண்டு படங்களும் நன்றாகத்தான் இருக்கும் அனைவரும் இரு படங்களையும் பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வினோத்தின் இந்த பேச்சை கேட்டா ரசிகர்கள் அஜித் இந்த படத்தில் வில்லனாகத்தான் நடிக்கிறார் என்று உறுதி செய்து கொண்டாடி வருகின்றனர்.