உங்களுக்கு உடல் எடை அதிகரிக்குதா..? அப்போ இதான் காரணம்..!
காலை நேரம் என்பது மிகவும் முக்கியமானது, அன்றைய நாளின் நம்முடைய தொடக்கமே அந்த நாள் சிறப்பாக அமைய காரணமாக அமைகிறது.
அதிகரிக்கும் உடல் பருமன் குறிப்பாக காலையில் நாம் செய்யும் செயலை பொருத்தே மாறுபடும், அப்படி உடல் எடையை அதிகரிக்கும் பொதுவான காலை பழக்க வழக்கங்களை பற்றி பார்ப்போம்.
காலை உணவை தவிர்த்தல்: காலை உணவானது நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தரவல்லது. நாள் முழுவதும் ஆரோக்கியம் தரும். காலை உணவை தவிர்த்தால் உடலில் இன்சுலின் அதிகரிக்க வழிவகுக்கும்.
அதிக சர்க்கரை உணவு உண்ணுதல்: காபி, டீ போன்றவை குடிக்கும்போது அது உடலின் இன்சுலின் அளவை அதிகரிக்கும், இதனால் உடல் எடை கூடும், கொழுப்புகள் உடலில் சேரும்.
தண்ணீர் குடிக்காதது: நம் காலையை ஒரு டம்ளர் சூடான நீர் குடித்து ஆரம்பிக்க வேண்டும். இதனால் செரிமானம் சீராகும். தேவையான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் அது பசியை அதிகரித்து அதிகமாக சாப்பிட வைக்கும்.
உடற்பயிற்சி செய்யாதது: காலையில் நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்யும்போது உடல் ஆரோக்கியமடையும் இல்லையெனில் உடலில் கொழுப்பு சேர்ந்து உடல் எடையை அதிகரிக்கும்.
மன அழுத்தம்: காலை நேரங்களில் மனதை அழுத்தமாக வைப்பதினால் கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரந்து பசியை அதிகரிக்கும். கொழுப்பு உடலில் கூட்டும்.
தூக்கம் தடைபடுதல்: அன்றாடம் உடலுக்கு தேவையான தூக்கத்தை தூங்காதபோது அது கிரெலின் என்ற ஹார்மோனை சுரக்கவைத்து உடல் எடையை கூட்டும்.
செயற்கை உணவுகள்: காலையில் செயற்கையான உணவுகள், பாக்கெட் உணவுகள் ஆகியவற்றை சாப்பிடும்போது அது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்காது. உடலில் எடையையும் அதிகரிக்கும்.