தித்திக்கும் செட்டிநாடு ரங்கூன் புட்டு… ஈவினிங் ஸ்நாக்…!
ரவை 1 கப்
துருவிய தேங்காய் 1 கப்
வெல்லம் 1 கப்
தண்ணீர் 3 கப்
ஏலக்காய்த்தூள் 1/2 ஸ்பூன்
நெய் தேவையானவை
முந்திரி தேவையானவை
திராட்சை தேவையானவை
ஒரு ஃபேனில் நெய் சேர்த்து முந்திரி திராட்சை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே ஃபேனில் இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி துருவிய தேங்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
மற்றொரு ஃபேனில் வெல்லம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வெல்லம் கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
ஒரு வாணலில் நெய் சேர்த்து ரவையை நன்றாக வறுக்க வேண்டும். அத்துடன் கரைத்த வெல்லம் சேர்த்து கலந்து விடவும்.அதில் ஏலக்காய்த்தூள்,வறுத்த முந்திரி திராட்சை வறுத்த தேங்காய் சேர்த்து கிளறவும்.
மேலும் அதில் நெய் சேர்த்து கலந்து சிறிது வேக வைக்கவும்.
அவ்வளவுதான் தித்திப்பான செட்டிநாடு ரங்கூன் புட்டு தயார்.