சுவையான ராகி ரொட்டி செய்யலாமா..!
ராகி மாவில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலில் ரத்த சோகை வராமல் தடுக்கவும் உதவுகிறது. உடலில் ரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் இந்த ராகியை சாப்பிட நல்ல மருந்தாக அமையும்.
இந்த ராகி மாவில் இப்படி ரொட்டி செய்து சாப்பிடுங்க ரொம்ப ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- ஒரு சின்ன துண்டு இஞ்சி
- 4 பச்சை மிளகாய்
- ஒரு டீஸ்பூன் சீரகம்
- 2 கப் ராகி மாவு
- கால் கப் அரிசி மாவு
- அரை கப் துருவிய தேங்காய் கருவேப்பிலை
- ஒரு பெரிய வெங்காயம்
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
- உப்பு
செய்முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
- பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல பிசைந்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி பிசைந்து வைத்துள்ள மாவில் ஒரு உருண்டைகளை வைத்து சப்பாத்தி போல கைகளால் தட்டிக் கொள்ள வேண்டும்.
- ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி தட்டிய சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் தடவி இருபுறமும் வேகவைத்து எடுக்க வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான ராகி ரொட்டி தயார்.
- இதை செய்யும்போது வீட்டில் முருங்கைக்கீரை இருந்தால் அதையும் சேர்த்து பிசைந்து சுடலாம்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.