கார போண்டா.. ஸ்நாக்..!
கடலை பருப்பு – 1 கப் (250 கிராம்)
உளுத்தம் பருப்பு – 1/2 கப் (125 கிராம்)
தண்ணீர்
வெங்காயம் – 1
இஞ்சி
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை
உப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – 1/4 தேக்கரண்டி
அரிசி மாவு – 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை
எண்ணெய்
கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சுத்தம் செய்து 2 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸியில் ஊறவைத்த பருப்பு தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் மாற்றி நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், ஓமம், அரிசி மாவு மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவில் கொஞ்சம் எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் கார போண்டா தயார். இதனுடன் தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.