இன்னிக்கு நைட் செட் தோசை செய்யலாமா..!
பச்சரிசி – 1 கப் (250 கிராம்)
உளுந்து – 1/4 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
அவல் – 1/4 கப் (125 கிராம்)
உப்பு – தேவையானது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
நெய்
பச்சரிசி,உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்றாக அலசி நீரில் 3 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் அவல் 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸியில் ஊறவைத்ததை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த அந்த மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரத்திற்கு புளிக்க வைக்க வேண்டும்.
அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்.
மாவை தோசைக்கல்லில் ஊற்றி சுற்றி நெய் விட்டு மறுபக்கம் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.