முருங்கை கனவில் வந்தால் இது நடக்குமா..? பார்க்கலாமா..?
நமக்கு வரும் கனவுகள் நம் ஆழ்மனதின் வெளிபாடுகள் எனச் சொல்லப்படுகிறது. அப்படி நம் கனவில் வரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. அந்தவகையில் நம் கனவில் முருங்கை மரம், முருங்கைக்கீரை, முருங்கைக்காய் வந்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க…
கனவில் முருங்கைமரம் வந்தால் அது உங்களுக்கு வரும் அதிஷ்டம், செழிப்பு, செல்வம் ஆகியவற்றை தரக்கூடியதாக இருக்கும். உங்கள் வாழ்வில் ஒரு புதிய செய்தி, முதல் துவக்கம், வளர்ச்சி ஆகியவை வரக்கூடும்.
மேலும் கனவில் முருங்கைமரம் எவ்வாறு தோன்றுது என்று இது மாறுபடும், கனவில் நல்ல பசுமையான செழிப்பான மரம் வருகிறது என்றால் அது அதிஷ்டத்தை தரும். ஆனால் காய்ந்த மற்றும் இறந்த மரம் வரும்போது அது உங்களுக்கு கெட்டைதை உணர்த்துகிறது.
கனவில் முருங்கைக்கீரை வந்தால் அது நல்ல ஆரோக்கியத்தை குறிக்கிறது. உங்கள் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு தொடர் உடற்பயிற்சி செய்து உடலை ஆரோக்கியமாக பேணி காக்க வேண்டும்.
இந்த கீரையை நீங்கள் சாப்பிடுவது போல கனவு கண்டால் அது உங்கள் உடம்பு ஆரோக்கியமாக இருப்பதை குறிக்கும். முருங்கைகீரையை மருந்தாக உண்பது போல கனவு கண்டால் அது உங்க உடல் மற்றும் மன நோயை குணப்படுத்துவதாக அர்த்தம்.
கனவில் முருங்கைக்காய் வந்தால் அது உங்களுடைய பண வளர்ச்சி மற்றும் செழிப்பை குறிக்கிறது. முருங்கை கொத்து கொத்தாக தொங்குவது போல கனவு கண்டால் அது உங்களுடைய புதிய முயற்சி வெற்றிக்கான குறியாகும். திருமண வயதில் இருப்பவர்கள் கனவில் வந்தால் அது அவர்களுக்கு திருமணம் நடக்கப்போவதை குறிக்கிறது.
இதுபோல முருங்கை கனவில் வருவது ஒவ்வொரு தனிநபருக்கும் வேறுபடலாம். உங்கள் கனவில் முருங்கை வருவதன் அர்த்தத்தை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல நீங்கள் செயல்படலாம்.
