ADVERTISEMENT
சமைக்கும் எண்ணெய் சுத்தமானதா என நீங்களே வீட்டில் சோதித்து பார்க்கலாம்…!
-
ஒரு சுத்தமான நன்றாக நீர் இல்லாமல் காய்ந்த சிறிய பாத்திரத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை எடுத்து சிறிது ஊற்றி பிரிட்ஜில் வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து அதை பார்க்கும்போது அது கெட்டியாக மாறி இருந்தால் அந்த எண்ணெய் சுத்தமானது. இதுவே அது கெட்டியாக மாறாமல் திரவ நிலையிலே இருந்தால் அது கலப்பட எண்ணெய் ஆகும்.
-
ஆலிவ் எண்ணெயை அதே மாறி குளிர்சாதனப் பெட்டியின் ப்ரீசரில் வைத்து அரை மணி நேரம் கழித்து பார்த்தால் அது கெட்டியாக இருந்தால் சுத்தமானது இல்லையென்றால் கலப்படம்.
-
தேங்காய் எண்ணெயை சோதிக்க விரும்பினால் எண்ணெயை பிரிட்ஜில் 10 டிகிரி செல்சியஸில் 1 மணி நேரம் வைத்து பின் அதனைப் பார்த்தால் முழுவதுமாக கெட்டியாக இருக்கும் ஆனால் கலப்படம் உள்ள எண்ணெய் மேல் பரப்பு மட்டும் கெட்டியாகவும் மீதம் அப்படியே திரவ நிலையிலும் இருக்கும்.
-
சமைக்கும் எண்ணெயை ஒரு சோதனை குழாயில் எடுத்து அதில் 4ml டிஸ்டில்டு வாட்டர் சேர்த்து சிறிது நேரத்திற்கு குலுக்கி அதில் 2ml யை மற்றொரு சோதனை குழாயில் எடுத்து அதில் கான்சன்ட்ரேட்டட் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்த்து கலக்க வேண்டும் பின் இதில் எந்த நிற மாற்றமும் இல்லை என்றால் அது சுத்தமானது. ஆனால் அது கலப்படம் செய்த எண்ணெயாக இருந்தால் அது சிவப்பு நிறமாக மாறும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
