இல்லத்தரசிகளுக்கான பயனுள்ள சமையல் டிப்ஸ்…
* ஊறுகாய் தயாரிக்கும் போது கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் விரைவில் கெட்டுபோகாது.
* குலோப்ஜாமூன் செய்து அதனை நன்றாக ஆற வைத்து சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்தால் விரிசல் ஏற்ப்படாது, உடைந்து போகாது.
* முந்திரி பருப்பில் சிறிது பச்சை கற்பூரத்தை போட்டு வைத்தால் எறும்பு அண்டாது.
* கோதுமை மாவுடன் சிறிது பிரியாணி இலை போட்டுவத்தால் வண்டு பிடிக்காது.
* குலோப்ஜாமூன் செய்ததில் சர்க்கரை பாகு மீந்துவிட்டால், அதில் சிறிது மைதா மாவு சேர்த்து பிசைந்து சப்பாத்தி பதத்திற்கு திரட்டி, உங்களுக்கு ஏற்ற வடிவத்தில் வெட்டி எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான இனிப்பு பிஸ்கட் மாதிரி இருக்கும்.
* சமைக்கும் போது எண்ணெய் கையில் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைகிழங்கு சாறு போட்டால் கொப்பளம் வராமல் சரியாகிவிடும்.
* ஆப்பத்திற்கு மாவு தயார் செய்யும் போது அதில் இரண்டு வாழைப்பழத்தை மசித்து சேர்த்து ஆப்பம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
