வறண்ட கூந்தலுக்கு இந்த மாஸ்க் பயன்படுத்துங்க..! அசத்தலான டிப்ஸ்..!
முட்டை தலைமுடிக்கு அதிக ஊக்கமளிக்கக்கூடியது. முட்டை நம் தலைமுடிக்கு இயற்கை கண்டிஷ்னராகவும் தலைமுடி சேதாரத்தை தடுக்கவும் முடி உதிர்தலை தடுக்கவும் முடியின் வளர்ச்சியை தூண்டவும் பயன்படுகிறது.
தலைமுடி வறட்சி ஏற்ப்பட்டால் முடியின் நுனிகளில் வெடிப்பு ஏற்ப்படும். மேலும் முடி உதிர்தல், பொடுகு என அடுத்தடுத்து பிரச்சனைகளை உண்டாக்கும்.
இவற்றையெல்லாம் சரிசெய்ய முட்டை பயன்படுத்தி தலைமுடிக்கு ஒரு ஹேர்மாஸ்க் தயாரிக்கலாம் வாங்க,
ADVERTISEMENT
தேவையான பொருட்கள்:
தயிர் – 1 கப்
முட்டை வெள்ளைக்கரு – 2
அவகேடோ – 2 ஸ்பூன்
செய்முறை:
முட்டையை உடைத்து அதன் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்துக் கொண்டு அதனை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அடித்து வைத்துள்ள முட்டையுடன் தயிர், அவகேடோ பழத்தையும் நன்றாக மசித்து அதில் கலந்துக் கொள்ள வேண்டும்.
மூன்றையும் ஒன்றாக கட்டிகள் இல்லாதவாறு மசித்து கொள்ளவும்
இந்த ஹேர்மாஸ்க்கை தலையின் வேர்க்கால்களில் தடவி அரைமணி நேரம் வைத்திருந்து பின் தலையை அலசிவிட வேண்டும்.
இப்படி வாரம் ஒரு முறை செய்து வர தலைமுடியின் வறட்சி நீங்கி முடி செழிப்பாகவும் பளப்பளப்பாகவும் காணப்படும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.