இது உங்களுக்கு தெரியுமா..!
சர்க்கரை வைத்திருக்கும் டப்பாவில் சில கிராம்பு போட்டுவைக்க எறும்புகள் அண்டாது.
அவலை லேசாக வறுத்து அதனை அரைத்து தோசை மாவில் கலந்து தோசை ஊற்றினால் தோசை மிருதுவாக இருக்கும்.
எந்த வகையான உணவு சமைத்தாலும் அதில் பெரிய வெங்காயத்திற்கு பதிலாக சின்ன வெங்காயத்தை சேர்த்து சமைக்க டேஸ்டியாக இருக்கும்.
சூப் செய்தால் அதில் அவலை லேசாக வறுத்து பொடியாக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும்.
சிறிது சோள மாவினை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கரைத்து தோசை மாவில் கலந்து ஊற்றினால் தோசையானது கல்லில் ஒட்டாமல் வரும்.
பூசணிக்காய் பொரியல் செய்யும்போது நீர் அதிகமாக சேர்த்துவிட்டால் உளுந்தை பொடியாக்கி அதில் சேர்க்க நீரை உரிஞ்சிவிடும்.
வெங்காயம் நீளமாக நறுக்க வாழைக்காய் சீவலில் சீவலாம்.
கைப்பிடி முருங்கைகீரையை நெய் விட்டு வதக்கி பின் அதில் சிறிது தேங்காய் சேர்த்து அரைத்து சாம்பாரில் கலந்து விட்டால் சுவை அதிகமாக இருக்கும்.
ஆப்ப மாவில் சிறிது கோதுமை மாவை கலந்து சுட்டால் ஆப்பம் சீக்கிரமாக காய்ந்து போகாமல் இருக்கும்.
மிளகாய்த்தூள் அரைக்கும்போது அதில் அரிசியை வறுத்து அதில் சேர்த்து அரைத்து குழம்பு வைத்தால் கெட்டியாக இருக்கும்.
வெள்ளைபூசணியை துருவி அதில் சீரகத்தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அரைத்து பருகலாம்.
ராகியை ஊறவைத்து அரைத்து அதன் பாலை வடிகட்டி அந்த பாலை வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது புளித்த மோரை சேர்த்தால் வெண்டை மொறுமொறுவென இருக்கும்.