இந்த வரிகளை கேட்டால் போதும் தன்னம்பிக்கை..!
ஜானரில் பார்க்கலாமா, நம்மில் பலருக்கும் ஒரு எண்ணம் உண்டு நீ சோர்ந்து போகும் பொழுது உன்னை ஒருவர் ஆறுதல் சொல்லி தேறும் விதமாக உன்னை ஊக்கபடுத்துவார்கள் நம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருவர் இருப்பார். அதையும் தாண்டி நம்மில் புத்துணர்ச்சியை அளிக்க கூடிய ஒரு மருந்து என்று சொன்னனால் அது பாடல் என்று சொல்லலாம், ஒரு சோகம், கவலை, பயணம், காதல் அனைத்திலும் ஓன்று சேர்ப்பது இந்த பாடல்கள் தான், அதிலும் தனி ஈர்ப்பு இந்த “மோட்டிவேஷனல் பாடல்களுக்கு “அதில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.
படத்தியின் நாயகிக்கு ஒரு பிரச்சனை ,பயத்தில் தவித்து கொண்டு இருக்கும் நாயகி ,யாரு என்று தெரியாமல் அவளை காப்பாற்றும் நாயகன் இந்த படம் எப்பொழுதும் சரி, எப்பொழுதும் சரி, ரசிகர்களின் கூட்டங்கள் குறையாமல் இருக்கும். “பாதியில விட்டு போறவன் நான் இல்லை” இந்த டயலாக் எங்கயோ கேட்ட மாதிரி இருக்குதா, உன்னால எவளோ முடியுமோ அந்த அளவிற்கு முயற்சி செய்து கொண்டு செல்,ஏனா இதற்க்கு எல்லையே இல்லை இந்த பாடலை இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைக்க, சுக்ஹ்விந்தர் சிங் பாடிய பாடல் இது .
ஏறு முன்னேறு
இது கரையே இல்லா
காட்டாறு ஓடு முன்னோடு
ஒரு வெற்றி என்பது கண்
கூடு…………..
உன்னை சுற்றி எத்தனை தடைகள் வந்தாலும் அதை எல்லாம் உன் மனதிற்குள் வாங்கி கொள்ளாமல் நீ உன் இலக்கை மட்டும் உறுதி கொண்டு ஒடி கொண்டு செல் என்று கூறும் வகையில் அமைவது தான் இந்த பாடல் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இசையமைக்க பாடகர்கள்,அனிருத் ரவிசந்தர், யோ யோ ஹனி சிங், பாஜ்ருல், ஹிப் ஹாப் தமிழா நால்வரும் சேர்ந்து பாடிய பாடல் இது .
நாளை என்றும்
நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன்
கை பொம்மைகளே
என்றால் கூட போராடு
நண்பா என்றைக்கும்
தோற்காது உண்மைகளே…….
எல்லாரும் கண்டிப்பா ஒருநாள் ஜெயிப்பாங்க அதற்க்கு காலம் வரும் வரை நீ நிற்காமல் ஓடிக்கொண்டு இரு நண்பா, உன் பாதையில் எத்தனை திருப்பங்கள் வந்தாலும் அதை எல்லாம் தாண்டி நீ சென்று கொண்டு இரு, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்,பென்னி டயல் பாடிய பாடல் இது .
எல்லோருக்கும் ஜெயிக்கிற
காலம் வரும்
புல்கூடத்தான் பூமியைப்
பிளந்து வரும்
உன் பாதையில் ஆயிரம்
திருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்……
இந்த மாதிரி நீங்க அதிகமாக கேட்கும் மோட்டிவேஷனல் பாடல் எது..?
– சரஸ்வதி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..