குடிகார கணவனை கொலை செய்த மனைவி..! போலீசில் சிக்கியது எப்படி..?
சென்னை நசரதபேட்டையை சேர்ந்தவர்கள் சீனிவாசன்-மங்களலட்சுமி தம்பதியினர். இதில் சீனிவாசன் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி மங்கள லட்சுமி ஊர் காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
குடிப்பழக்கம் உடைய சீனிவாசன், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை வழக்கம் போல் குடிபோதையில் வந்த சீனிவாசன் லட்சுமியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மங்களலட்சுமி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவரின் வயிற்றில் குத்தியுள்ளார்.
ரத்தக்காயம் அடைந்த சீனிவாசன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது மனைவி மங்கள லட்சுமியை கைது செய்தனர்.
-பவானிகார்த்திக்