ADVERTISEMENT
மெக்சிகன் ரைஸ் ஹோட்டல் சுவையில் இனி வீட்டிலே…!!
வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி மெக்சிகன் ரைஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
பாசுமதி ரைஸ்- 500 கிராம்
வெண்ணெய்- 3 ஸ்பூன்
குடைமிளகாய்- 2
வெங்காயத்தாள்- ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்
சீரகம்- ஒரு தேக்கரண்டி
தக்காளி பேஸ்ட் – ஒரு கப்
மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
பாசுமதி அரிசியை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை நீலமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் பொறிந்ததும் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் குடைமிளகாயும் சேர்த்து வதக்க வேண்டும்.
இரண்டும் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனுடன் தயாராக உள்ள தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும் பிறகு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அப்பறம் ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
பொரித்த வெங்காயத்தை தூவி சாப்பிடலாம்.
இப்படி செய்து குடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)