குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பால் போதுமா என்பதை எப்படி அறிவது ?
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தரும் தாய்பாலின் அளவும், அவை போதுமா இல்லையா என்பதையும் தெரிந்துக்கொள்வது நல்லது. அதை அறிந்து கொள்ள சில வழிகளும் இருக்கிறது.
தாய்ப்பால் கொடுக்க தொடங்கியதும், குழந்தை பசியில் இருந்தால் வேகமாக பருகும். பசி தீர தீர மெதுவாக குடிக்கும். குடித்து முடித்த பின் குழந்தையை தோல் மீது போட்டு முதுகில் கட்டாயம் தட்ட வேண்டும். காரணம் குடித்த பால் நெஞ்சிலேயே நிற்கும் என்பதால்.
தாய்ப்பால் குடித்துக் கொண்டே சில குழந்தைகள் தூங்க ஆரம்பிக்கும். அது நல்லதல்ல, அப்படி தூங்கும் குழந்தையின் உதட்டில் தட்டி எழுப்ப வேண்டும்.
பால் குடித்துக்கொண்டே தூங்கினால், அவை குடலுக்கு சீராக செல்லாது. பின் குழந்தைகள் மந்தமாகவே இருக்கும்.
நாளடைவில் குழந்தைக்கு போதிய தாய்ப்பால் கிடைத்துள்ளது என்றால், குழந்தையின் உடல் வளர்ச்சியில் மாற்றம் இருக்கும். குழந்தையின் கண்ணங்கள் வட்டமாக இருக்கும்.
சரியாக நீங்கள் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால், குழந்தை தூக்கத்தில் இருந்து எழுந்து அழுதுக் கொண்டே இருக்கும்.
ஐந்து, ஆறு, மாதங்கள் ஆகியும் குழந்தைக்கு சரியான தாய்ப்பால் கிடைக்கவில்லை, உடல் வளர்ச்சியில் மாற்றம் இல்லை, என்றால் கவலை வேண்டாம்.
அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரை சந்தித்து இதுகுறித்து ஆலோசனை கேட்கலாம். அதற்கு ஏற்றவாறு உணவுகளை அவர் பரிந்துரை செய்வார்.
Discussion about this post