பப்பாளி ரத்த சர்க்கரையின் அளவை குறைக்குமா?
பப்பாளி பழம் உடலுக்கு நல்லதா ? டையட் புட்டில் சேர்த்துக்கொள்ளலாமா? ரத்த சர்க்கரையின் அளவை குறைக்குமா
? என நம்மில் பலருக்கு இந்த கேள்விகள் உண்டு.
அதற்கான விளக்கம் கொடுக்கிறார், டயட்டீஷியன் மற்றும் வெல்னஸ் நியூட்ரிஷன் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.
பப்பாளி சாப்பிடுவது உடலுக்கு நல்லது தான், பின் ஏன் கர்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் என நீங்கள் நினைக்கலாம்.
பப்பாளி சூட்டை கிளப்பும் உணவு. அதன் சூட்டை கருவில் இருக்கும் குழந்தையால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தான் கர்பிணி பெண்களுக்கு பப்பாளி கொடுக்க மறுக்கிறார்கள்.
பப்பாளி சாப்பிடுவதால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் என்று நீங்கள் நினைதுக் கொண்டு இருப்பீர்கள். ஆனால் அது தவறு.
நாம் எந்த உணவை சாப்பிட்டாலும், சில மணி நேரத்திலேயே ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். அதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என சொல்லுவார்கள்.
பப்பாளி பழத்தில் ரத்த சர்க்கரையின் அளவு மிகவும் குறைவு, எனவே 100 முதல் 120 கிராம் வரை மட்டும் பப்பாளி சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.
முக்கியமாக காலை உணவை முடித்த உடன் பப்பாளி எடுத்துக் கொண்டால், கிளை செமிக் லோடு அதிகரிக்கும். அதாவது நாம் உண்ணும், காலை உணவில் கார்போஹைட்ரேட் இருக்கும். பின் பப்பாளியும் சாப்பிட்டால், இரண்டும் சேர்ந்து உடலுக்கு கேடு விளைவீக்கும்.
வாழைப்பழத்தை தவிர, வேறு எந்த பழமாக இருந்தாலும். நாம் சாப்பிட்ட நேரத்தில் இருந்து நீண்ட நேரத்திற்கு பிறகு எடுத்துக் கொண்டால், பழங்களில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் கலக்காமல் இருக்கும்.
எனவே எந்த பழத்தை சாப்பிட்டாலும் அளவுடனும், நேரத்தை கணக்கில் வைத்தும் சாப்பிடுவது சிறந்தது என பதில் அளித்தார்.
Discussion about this post