இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- பூரி மாவு பிசைவதில் அதில் அரை ஸ்பூன் சர்க்கரை பவுடர் சேர்த்து பிசைந்து சுட்டால் பூரி ரொம்ப நேரத்திற்கு மொறுமொறுப்பாகவும் உப்பலாகவும் இருக்கும்.
- வாழைக்காய் பஜ்ஜி சுடும்போது அந்த மாவில் ஒரு கரண்டி இட்லி மாவை கலந்து பஜ்ஜி சுட்டால் சுவையாக இருக்கும்.
- எலுமிச்சை தோலை காயவைத்து அதனை அலமாரியில் வைக்கும்போது பூச்சுகள் மற்றும் வண்டுகள் வராது.
- பூண்டு சீக்கிரம் முளைத்து வராமல் இருக்க பூண்டை உருளைக்கிழங்குடன் வைக்க வேண்டும்.
- குழம்பு கொதித்துக் கொண்டு இருக்கும் சமையத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இருந்தால் சுடுநீரை சேர்த்தால் மட்டுமே குழம்பு சுவை மாறாமல் இருக்கும்.
- தேங்காய் சட்னி சீக்கிரம் கெட்டுபோகாமல் இருக்க அதனுடன் ஒரு துண்டு புளி சேர்த்து அரைக்க வேண்டும்.
- பொரியலில் தீய்ந்த வாசனை வராமல் இருக்க, பொரியல் செய்ததும் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் 1 பிரட் வைத்து அரை மணி நேரம் மூடி வைத்து பின் அந்த பிரட்டை எடுத்துவிட்டால், தீய்ந்த வாசனை வராது.