“அரசு உதவியாக இருந்தது“ – தமிழக ஒலிம்பிக் வீரர்கள் பேட்டி!
தற்போது நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 6 பேர், தடகள போட்டிகளில் கலந்துக் கொண்டனர். இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில், பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழாவில், 6 வீரர்களுக்கும், தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, தடகள வீரர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், தங்களுக்கு, தமிழக அரசு சிறப்பான முறையில் உதவியதாக தெரிவித்தனர். தங்களளுக்கு தேவையான அனைத்தையும், பாரீஸில், அரசு செய்துக் கொடுத்தது என்றும் கூறினர்.
-பவானி கார்த்திக்