வேளாங்கண்ணி மாதா பேராலயம்… திருவிழாவிற்கான சிறப்பு அறிவிப்பு…
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் எட்டாம் தேதி வரை கொடியேற்றம், தேர் திருவிழா நடைப்பெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான கொடியேற்ற திருவிழா நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 29ம் தேதி வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், திருவிழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்தும், பக்தர்கள் இப்போது முதலே வேளாங்கண்ணியில் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் , பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை கட்டுபடுத்தும் வகையிலும் மும்பை மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதே போன்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் நாகை வேளாகண்ணிக்கு கூடுதலாக செப்டம்பர் 8 ஆம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”