“ஆறாம் திருமுறை திருவதிகை வீரட்டானம்..”
சிவ சிவ.. திருச்சிற்றம்பலம்.
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
திருவதிகை வீரட்டானம்.
ஆறாம் திருமுறை
இந்த பாடலுக்கான அர்த்தம் இதில் படிக்கலாம்..
செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
வம்பினாண் மலர்க்கூந்தல் உமையாள் காதல்
மணவாள னேவலங்கை மழுவா ளனே
நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே அண்டகோ சரத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.
பொழிப்புரை :
செம்பொன்னாற் செய்து அதன் கண் அழகினை ஊட்டினாற்போல இயற்கையாக அமைத்த செஞ்சடைப்பெருமான் , இயற்கையான தெய்வ மணம் கமழும் தன்மையோடு மலர்களையும் அணியும் கூந்தலை உடைய உமாதேவியினுடைய காதலுக்கு இருப்பிடமான கணவன். வலக்கையில் மழுப்படையை உடையவன். நம்மால் விரும்பப்படுபவன் . நான்கு வேதங்களும் வழிபடுமாறு இருப்பவன். அச்சமில்லாத அசுரர்களின் மும்மதில்களும் நடுங்குமாறு அவற்றை அழித்தான் அம்பினன். எல்லா உலகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்பவன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே .
பல்லடம் தண்டபாணி அவர்களின் குரலில் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் அனைவருக்கும் அன்பான சிவ காலை வணக்கம்..
– லோகேஸ்வரி.வெ