ஆடி வெள்ளி நாகாத்தம்மன் வழிபாடு..!! இதை செய்தால் போதும் செல்வம் செழிக்கும்..!!
ஆடி மாதம் என்றாலே அம்மன் சுவாமிகளுக்கு மிகவும் விசேஷமான மாதம், முக்கியமாக ஆடி வெள்ளி அன்று. ஆடி மாதம் அம்மன் கோவிகளுக்கு சென்று வழிபடுவது மிகவும் பலன் தரும் முக்கியமாக ஆடி வெள்ளிக்கிழமை அன்று.
இன்று ஆடி வெள்ளி, காலை அல்லது மாலை வேளையில் அருகிலுள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் முக்கியமாக.., ஆடி வெள்ளி அன்று நாகதம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டால் இன்னும் சிறந்த பலன் கிடைக்கும்.
நாகாத்தம்மன் வரலாறு :-
சிவபெருமானின் கழுத்தில் இருந்த நாகராஜன் மிகவும் கவலையாக இருந்துள்ளார்.., அப்பொழுது சிவபெருமான் என்னை வணங்குபவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைப்பவன் நான், ஆனால் நீ என்னுடன் இருந்து கொண்டு கவலையாக இருப்பது ஏன் என கேட்டுள்ளார்.
அதற்கு நாகராஜன்.., எனக்கு குழந்தை இல்லாதது மிகவும் கவலையாக உள்ளது. நாகராணிக்கும் அதே கவலை தான் என கூறியுள்ளார். உடனே சிவபெருமான் பார்வதி தேவியை அழைத்து.., நாகராணிக்கு தாய் ஆகும் வரத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார்.
பார்வதி தேவியும் அந்த வரத்தை நாகராணிக்கு அளித்துள்ளார்.., நாகராணிக்கு 8 தேவைதைகள் பிறப்பார்கள்.., அதில் முதலாவதாக தோன்றியவர் தான் “நாகாத்தம்மன்” மற்ற ஏழுபேரும் நாக தேவைதையாக அவதரித்தார்கள்.
நாகாத்தம்மன் வழிபாடு :-
அப்படி பொங்கல் வைத்து படையல் இடும் முன் நாக புற்றுவிற்கு பால் மற்றும் முட்டை வைத்து வழிபடலாம்.., புற்றுவை சுற்றிலும் மஞ்சள் மட்டும் குங்குமம் இட்டு வழிபடலாம்.., ஆடி வெள்ளி அன்று மட்டும் தான் இந்த வழிபாடு செய்ய வேண்டும் என்று அல்ல..,
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று செய்யலாம்.., அப்படி தொடர்ந்து நாகாத்தம்மனுக்கு பால் மற்றும் முட்டை வைத்து வழிபட்டால் அவர் உங்களுக்கு இஷ்ட தெய்வமாக இருப்பார்.., திருமணம் ஆகாத கன்னி பெண்கள் நாக புற்றுவிற்கு மஞ்சம் மற்றும் குங்குமம் இட்டு வழிபட்டால் மாங்கல்ய வரம் கிடைக்கும். திருமணம் ஆன பெண்கள் வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
முக்கியமாக ஆடி வெள்ளி அன்று பொங்கல் வைத்து அம்மாவிற்கு படையல் இட்டு வழிபட்டால் அவர் சர்வமாக வந்து உங்களின் குறைகளை தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..