இடம் பெயரும் செவ்வாய்..! அதிர்ஷ்டம் பெற்ற அந்த 3 ராசிகார்கள்..!!
மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக இருப்பவர் செவ்வாய்.
இவர் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்ளுவார்.
தைரியத்தையும் கம்பீரத்தினையும் தரும் செவ்வாய் பகவான், தற்போது மீன ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
ஜூன் 1ஆம் தேதி முதல் மேஷத்தில் குடியேறுகிறார். இது ஒரு ஆண்டுக்குப் பின் நடக்கிறது.
செவ்வாய் பெயர்ச்சியால் வாழ்வில் பொருளாதாரத்தில் முன்னேற்றமும் கம்பீரமும் பெறும் 3 ராசிகள் குறித்து பாப்போம்.
மேஷம் :
* பண வரவு அதிகரிக்கும்.
* கணவன் – மனைவி இடையே இருந்த பிரச்னை தீரும்.
* கம்பீரமும் மிடுக்கும் கூடும்.
* ஒரு விஷயம் நடக்காமல் இருந்தாலும் நடத்திக் காட்டுவீர்கள்.
* வரன் பார்ப்பவர்களுக்கு மனம்போல் மாங்கல்யம் உண்டாகும்.
* தடைபட்ட காரியங்கள் முடியும்.
மகரம் :
* ஜூன் முதல் செல்வாக்கு கூடும்.
* நடந்து செல்லும் நபருக்கு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
* புதிய மனை வாங்க வாய்ப்புகள் அதிகரிக்கும்.
* கெட்டப் பெயர்கள் நீங்கும்.
* தரகு, வைத்தியம், ஹோட்டல் தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கிட்டும்.
* உடல் நலம் சீராகி விடும்.
* சொந்த ஊரில் இருந்து நல்ல தகவல் வரும்.
சிம்மம் :
* ஜூன் முதல் ஆரோக்கியமான நிலை உண்டாகும்.
* தொழில்முனைவோராக இருந்தால் வெளிமாநிலங்கள் சென்று ஆர்டர்களைப் பிடிப்பீர்கள்.
* அரசின் பணியிடங்களுக்கு முயற்சி செய்தால் பாஸிட்டிவ் ஆன செய்தி வந்துசேரும்.
* செவ்வாய் சிம்ம ராசியினருக்கு மிடுக்கினை தருகிறார்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு, அலுவலக அரசியல் குறையும்.
* உயர்ந்த இடத்தை நோக்கி நகரும் வாய்ப்பு உருவாகும்.
இந்த மூன்று ராசிகார்களுக்கு மட்டுமே இன்றைய செவ்வாய் அதிஷ்டமான நாளாக உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..