இடுப்பு வலி நீங்க இதை செய்து பாருங்க
நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு, நீண்ட தூரம் வாகனம் ஓட்டிக்கொண்டு செல்பவர்களுக்கு, நாட்காலியில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்க்ளுக்கு அதிகமாக முதுகு வலியும், இடுப்பு வலியும் ஏற்படும்.
அதை சரிசெய்வது மிக சுலபம். அதுவும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே சரி செய்து விடலாம்.
முதல் டிப்ஸ் : சூடாக வடிக்கும் சாதத்தின் வடிநீர் தண்ணியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதாவது வடிக்கஞ்சி. அதில், சீரகம் கலந்து ஆறவைத்து குடித்தால் இடுப்பு வலி நீங்கி விடும்.
இரண்டாவது டிப்ஸ் : கோதுமையை பொன் நிறத்தில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 2 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் இடுப்பு வலி மட்டுமின்றி மூட்டு வலியும் பறந்து விடும்.
மூன்றாவது டிப்ஸ் : சுக்கு, மிளகு, பூண்டு, பனை வெல்லம், பொடுதலை இலை சேர்த்து வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை தேனில் கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் காலையில் சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி சரியாகி விடும்.
நான்காவது டிப்ஸ் : ஓமத்தண்ணீரில், 100மி.லி தேங்காய் எண்ணெய், கற்பூரம் சேர்த்து கொதிக்க வைத்து, சிறிதளவு சூட்டுடன் இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
ஐந்தாவது டிப்ஸ் : கஸ்தூரி மஞ்சள், வெள்ளை பூண்டு, நொச்சி இலை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். பின் அதை வேப்ப எண்ணெய்யோடு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி எடுத்து, வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால், இடுப்பு வலி உடனே குணமாகி விடும்.
மேலும் இது போன்ற பல மருத்துவ குறிப்புகளை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
வெ.லோகேஸ்வரி
Discussion about this post