வங்கதேசம் எதிரான 2 வைத்து மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியா அணி போராடி வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
வங்கதேசம் எதிரங்க மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரில் இந்திய அணி சுற்று பயணம் மேற்கொண்டது. அதில் ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் டெஸ்ட் தொடர் தொடங்கியது, கேப்டன் ரோஹித் சர்மா விற்கு காயம் காரணமாக தொடலிருந்து வெளியேறிய நிலையில் கே.எல்.றாகும் கேப்டனாக செயல்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியை வென்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தாக்காவில் நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவிற்கு வெற்ற பெற 145 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதில் 76 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து இந்தியா அணியின் பேட்ஸ்மேன் சொதப்பலான ஆட்டதை வெளிப்படுத்தினர். இறுதியில் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் அஸ்வினின் கூட்டணியால் இந்தியா அந்த இலக்கை போராடி வென்றது. இந்த போட்டியில், ரவிச்சந்திர அஸ்வின் ஆட்ட நாயகனவும் சடேஸ்வர் புஜாரா தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இதன் மூலம் டேஸ்டீ தொடரை இந்தியா கைப்பற்றியது.