தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அஜய் ஓகுலா என்பவர் துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அவர் எமிரேட்ஸ் லக்கி ட்ரா என்ற கம்பெனியில் இரண்டு லாட்டரி டிக்கெட் வாங்கி அதில் அவருக்கு பரிசு விழுந்துள்ளது.
பொதுவாக இந்தியர்கள் வளைகுடா நாட்டிற்கு பணிக்காக செல்வது இயல்பான ஒன்று. பல மாநிலங்களிலிருந்து பல இந்தியர்கள் வேலை நிமித்தமாக அங்கு சென்று பணி செய்கிறார்கள் அதேபோல் தான் அஜய் ஓகுலா என்பவர் துப்பாயில் உள்ள நகை கடை ஒன்றில் ட்ரைவராக பணியி புரிந்து வருகிறார்.அவருக்கு மாதம் 3200 திர்ஹம் சம்பாதிக்கிறேன். அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 72 ஆயிரத்து 185 ஆகும். அப்போது அவர் எமிரேட்ஸ் லக்கி ட்ரா என்ற கம்பெனியில் இரண்டு லாட்டரி டிக்கெட்களை வாங்கியுள்ளார்.
அதில் ஒரு டிக்கெட்டில் அவருக்கு இந்திய மதிப்பில் 33 கோடி ருபாய் லாட்டரி அடித்துள்ளது. இறந்த மகிழ்ச்சியை அவர் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் கூறுகையில், இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தை சார்ந்தவன் என்றும் இங்கு கற் டிரைவராக பனி புரிந்து வருவதாகவும் கூறினார் மேலும் அவர் பேசுகையில், இந்த லாட்டரியை வாங்கும்போது இவ்வளவு பெரிய ஜாக்பாட் அடிக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் எனக்கு மிகப் பெரிய பரிசு தொகை கிடைத்துள்ளது. மேலும் அவர் , 2 டிக்கெட்டுகளை வாங்கினதாகவும். அதை எமிரேட்ஸ் லக்கி ட்ரா கம்பெனியில் இருந்து வாங்கியதாகவும் கூறினார் .
மேலும் அவர் பேசுகையில், நான் வாங்கிய டிக்கெட்டுக்கு 15 மில்லியன் அராப் எமிரேட்ஸ் தினார் பரிசாகக் கிடைத்துள்ளது. நான் இத்தனை கோடி பணத்தை லாட்டரியில் பெற்றுள்ளேன் என்று கூறியபோது எனது குடும்பத்தினர் யாரும் நம்பவில்லை. இப்போது செய்திகளில் என்னைப் பற்றிய தகவல் வெளியானதால் அவர்கள் நம்புகின்றனர். எனது சொந்த ஊரிலும் அருகிலுள்ள கிராமங்களிலும் நலிந்தோருக்கு நிறைய தான தர்மங்களைச் செய்வேன்’ என்று கூறினார்