ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக காலமானார்.
ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே(52) மாரடைப்பு காரணமாக குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(மார்ச்.05) காலை காலமானார்.
1992 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக சிட்னியில் நடத்த சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். மேலும், இவர் 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 15 ஆண்டுகளாக ஷேன் வார்னே விளையாடி உள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். தனது மாயாஜால பந்துவீச்சால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்த இவரது இறப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷேன் வார்னே மறைவு குறித்து தகவல் அறிந்த கிரிக்கெட் பிரபலங்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.