ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே(52) மாரடைப்பு காரணமாக குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(மார்ச்.05) காலை காலமானார்.
இவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவின் திடீர் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். வெகு சீக்கிரம் போய்விட்டார்.
உண்மையான மேதையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கிரிக்கெட் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.