சென்னையில் இப்படியும் ஒரு ஆட்டோ ஓட்டுனரா..!- ஊரும் உறவும் 16
அடிக்கும் வெயிலில் வெளியே செல்வதே கடினமான ஒன்றாக இருக்கும் பொழுது.., அடிக்கும் வெயிலிலும் அயராது உழைப்பவர்களை பாராட்ட வேண்டிய ஒன்று.
மழை வெயில், காலங்களில் வெளியே செல்லும் பொழுது தக்க சமயத்தில் போக்குவரத்து கிடைக்கவில்லை என்றால், எப்படி இருக்கும். அதுவே போக்குவரத்து தக்க சமயத்தில் கிடைத்து விட்டால்..?
அப்படி எனக்கு தக்க சமயத்தில் உதவிய ஒரு ஆட்டோ ஓட்டுநர் பற்றி பார்க்கலாம். சென்னை க்கு நான் புதுசு, சென்னை வந்து இறங்கியதும் என் தோழி வீட்டு முகவரி சொல்லி அங்கே விட்டு விடுமாறு கேட்டேன். ஆட்டோ ஏறும் பொழுது 200 ரூபாய் சொல்லி , இறக்கி விட்டதும் 300 ரூபாய் வாங்கி விட்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து.., கொருக்குப்பேட்டை செல்வத்தற்கு 300 ரூபாய் ஆகுமா என்று எனக்கு தெரியாது. அவர் கேட்டதும் கொடுத்துவிட்டேன்.
மறுநாள் வேலை தேடி சென்ற இடத்திற்கு செல்ல ஒரு பேருந்து மற்றும் அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் தான் செல்ல வேண்டும்.
அதாவது பிராட்வே டு தேனாம்பேட்டை வரை பஸ், கொருக்குப்பேட்டையில் இருந்து பிராட்வே வரை ஷேர் ஆட்டோ.., ஆட்டோ ஏறும் முன் என் பர்ஸ் காணாமல் போனது. அதனால் ஆட்டோ ஏற முடியாமல், அந்த அண்ணாவிடம் இங்கிருந்து எப்படி நடந்தே செல்வது என்று கேட்டேன்.
ஆட்டோ அண்ணா : கொருக்குபேட்டையில் இருந்து பிராட்வே செல்ல 5 கிமி ஆகும், அவ்வளவு தூரம் நீ நடந்து செல்ல முடியாது மா, நீ எங்க போகணும் சொல்லு நான் விட்டுறன் சொன்னாரு.
நான் : இல்ல அண்ணா என்னோட பர்ஸ் தொலைஞ்சு போச்சு நீங்க சொல்லுங்க.., நான் நடந்தே போறன்.
சொன்ன.., ஆனா அந்த அண்ணா கேட்கல என்ன அவர் ஆட்டோல ஏத்திக்கிட்டாரு.
எனக்கு ஒரே சங்கடமா இருந்துச்சு காசு இல்லாம பயணம் செய்யுறோம். இந்த காசுக்காக தான அவரும் உழைக்குறாரு.., அப்படி நான் மனசுக்குள்ள யோசிச்ச அப்போ, அந்த சொன்ன வார்த்தை.
“மனிதனாக பிறந்ததே மற்றவர்களுக்கு உதவு வதற்கு தான்” மா, நீ ஏரோ ஒருத்தர் ஆட்டோல ஏறுனதா நினைக்காத உன் அண்ணா ஆட்டோல ஏறுனதா நினைச்சுக்கோ மா, அப்படி சொல்லி இறக்கிவிட்டாரு.
இறங்கும் பொழுது வேற ஆட்டோல போறதுக்கு 40 ரூபாய் காசும் கொடுத்தாரு.. நேற்று பார்த்த ஆட்டோ ஓட்டுனருக்கும் இன்று பார்ப்பவருக்கும் நிறைய மாற்றங்கள்.., சென்னையில் இப்படி முன் பின் பழக்கம் இல்லாத ஒருவருக்கு உதவும் அந்த நல்ல உள்ளம்.., நினைத்து என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
மேலும் இதுபோன்ற பல உண்மைக் கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி