பெங்களூருவில் நகைக்கடைக்குள் புகுந்த மழை நீரில் நகைகள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பெங்களூருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் பெங்களூருவில் சம்பங்கி சாலையில் தரைத்தளத்தில் கட்டப்பட்ட தங்க நகைக்கடைக்குள் மழைநீர் புகுந்தது.
பெருக்கெடுத்து ஓடிய மழை நீருடன் சேர்ந்து கடையில் இருந்த தங்க நகைகள், மரச்சாமான்கள் உள்ளிட்டவையும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதாக நகை உரிமையாளர் குற்றச்சாட்டியுள்ளார்.
Discussion about this post