மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 13 ஆண்டுகளாக விளையாடி வந்த கரேபியன் நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் கெய்ரோன் பொல்லார்ட் தனது ஓய்வை அறிவித்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக மும்பை அணியின் பெரும் தூணாக விளங்கிய பொல்லார்ட் ஐபிஎல் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் இதுவரை 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் யும் வென்றுள்ளது. அதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கெய்ரோன் பொல்லார்ட். எந்தவொரு பந்துவீச்சாளரும் இவருக்கு கடைசி ஒவர்களை வீசுவதற்கு தயங்குவார்கள் அப்படபட்ட ஆட்டத்திறனை கொண்டவர் கெய்ரோன் பொல்லார்ட். இவர் தன அணிக்காக முடித்து கொடுத்த போட்டிகள் என்றும் ரசிகர்களின் நினைவில் இருக்கும்.
கெய்ரோன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியில் துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா இல்லாத போது அணியின் கேப்டன் ஆகவும் இருந்தார்.இந்நிலையில் அடுத்த ஐபிஎல் எளம் தொடங்கவுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து பொல்லார்ட் விடுவிக்க பட உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில்தான் பொல்லார்ட் ஐபிஎல் லில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவர் அறிவிப்பில், கடந்த 13 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் உடன் ஆடிய தருணம் மறக்க முடியாதது, என்னால் மும்பைக்காக விளையாட முடியவில்லை என்றால் மும்பை அணிக்கு எதிராக என்னால் விளையாடுவதை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை ஆகையால் ஐபிஎல் தொடர்களில் ஒரு வீரராக விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற ,முடிவெடுத்துள்ளேன் என்று அறிவித்துள்ளார்.
https://twitter.com/KieronPollard55/status/1592430332443209728
மேலும் அவர் கூறுகியில், மும்பை அணியின் பேட்டிங் பயிற்சயாளராக தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மும்பை அணியை நட்சத்திர அணியாக மாற்றிய முக்கிய வீரரில் பொல்லார்டும் மிக முக்கிய பங்காற்றியுள்ளார் இவரின் ஓய்வு அறிவிப்பால் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் ஆக்தியுள்ளது.