பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அங்கு பயலும் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் சென்னை ஆல்வார்ப்பேட்டையிலுள்ள அலுவலகதிரிலிருந்து முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர் அவர்கள் கூறுகையில், இது போன்ற திட்டத்தால் ஏழைகள், மாணவ, மாணவிகள் பயன்பெறுவதாகவும் கிராமங்களில் இருந்து நெடுதூரம் வருவதால் காலை உணவை எடுத்து கொள்ள முடியாமல் இருந்தது இந்த திட்டத்தின் மூலம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து பேசிய முதல்வர், முதலில் அனைவரும் சாப்பிடுங்கள் என்று அன்போடு கூறியது அங்க நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.