உங்கள் வீட்டில் இந்த விநாயகரை வைக்க மறக்காத்தீங்க..!!
வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தியானது கொண்டாடப்படவுள்ளது.. அன்றைய நாளில் பலரும் விநாயகர் சிலையை வைத்து பூஜைகள் செய்து படையலிட்டு வழிபாடு செய்வது உண்டு.. ஆனால் நாம் வீட்டில் வைக்கும் ஒவ்வொரு வகை விநாயகருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.. அதை பற்றி விரிவாக படிக்கலாம்..
பொதுவாகவே வீட்டில் எந்த ஒரு சுபகாரியம் செய்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்வது உண்டு.. அப்படி மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் சகள சௌபாக்கியமும் கிடைக்கும்..
குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி விடும்.. மற்றும் குழந்தைகளுக்கு படிப்பறிவு அதிகரிக்கும்…
புற்றுமண்ணில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்பது ஐதீக உண்மை.. மேலும் இந்த புற்றுமண் பிள்ளையாரை விவசாய நிலத்தில் வைத்து வழிபட்டால் விளைச்சல் நன்கு கிடைக்கும் என்பது ஐதீகம்
ஒரு சிலருக்கு முகம் மற்றும் உடலில் காயங்கள், கட்டிகள், மற்றும் கொப்பளங்கள் இருக்கும் அவை நீங்க வெள்ளத்தினால் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் உடலில் உள்ள கொழுப்பு கட்டிகள் கரைந்து விடும்…
எதிரிகளால் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் இடையூறுகளில் இருந்து விடுபட உப்பில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் இந்த தொந்தரவு முற்றிலுமாக விலகி விடும்…
பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளெருக்கில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் இந்த பிரச்சனை முற்றிலுமாக விலகி விடும்…
நெற்றியில் இடும் திருநீரில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் உஷ்ணத்தால் ஏற்பட்ட நோய்கள் குணமாகி விடும்..
புத்திர பாக்கியம் கிடைக்க சந்தனத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீக உண்மை…
வெண்ணெயில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் கடன் தொல்லைகள் குறைந்து விடும்…
ஒவ்வொருவகை பிள்ளையாருக்கும் ஓவ்வொரு வகை பலன்கள் கிடைக்கும்.. எனவே இந்தமுறை வீட்டில் இந்த வகை பிள்ளையாரை வைத்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும்….
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..