உங்கள் வீட்டிலும் இந்த பிரச்சனை இருக்கா..? அப்போ இந்த வழிபாட்டை செய்ய மறக்காதீங்க..!!
சாபமானது மனிதர்களால் மட்டுமல்ல இறைவனால் விதிக்கப்பட்ட ஒன்று.. இந்த சாபமானது மனிதர்களுக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் கொடுக்கப்பட்ட ஒன்று…
ஆனால் அந்த சாபத்தில் இருந்து விடுபட சில பரிகாரங்கள் உண்டு. இறைவனுக்கு முனிவர்களாலும், ரிஷிகளாலும் விதிகப்பட்ட சாபத்தில் இருந்து விடுபட பல பரிகாரங்கள் இருப்பதாக புராண கதைகள் சொல்லுகிறது…
சாபம் பெற்றவர்கள்.. அந்த பரிகாரங்களை செய்துவிட்டால் அவை நீங்கி விடுகிறது.. அதுவே செய்யாவிட்டால் அந்த சாபமானது அடுத்த ஜென்மத்தில் மட்டுமல்ல பல தலைமுறைகளையும் பாதிக்கிறது.. ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்களுக்கும் அது தான் காரணம்.
அப்படியாக இந்த சாபங்கள் நீங்கவும் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகவும் இந்த வலிபாட்டை செய்தால் போதும்..
முதலாவதாக சுத்தமான மாவிலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அந்த மாவிலையில் பூச்சி அரிப்பு, இலையில் ஓட்டை, பழுத்த அல்லது காய்ந்த மாவிலைகளை பயன் படுத்த கூடாது.
உங்கள் குல தெய்வம் படத்தின் மாவிலைகளை கீழே அடுக்கி வைக்க வேண்டும் அதாவது இலையின் காம்பு பகுதியானது குல தெய்வத்தின் படத்தை பார்த்தவாரும் இலையின் நுனி பகுதி உங்களை பார்த்த வாரும் கீழே அடுக்கி வைத்திருக்க வேண்டும் குறைந்தது 21 இலைகளுக்கு மேல் அடுக்கி வைத்திருக்க வேண்டும்.
அந்த இலையின் மீது தேங்காய் துருவலோடு கலந்த சர்க்கரை கலந்த நெய்வைத்தியத்தை படைக்க வேண்டும்.. அதன் பின் குல தெய்வத்திற்கு தீபம் ஏற்றி மனதில் உள்ள குறைகள் மற்றும் வீட்டில் உள்ள பிரச்சனைகள் நினைத்து மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்..
அப்படி செய்தால் நம் கவலைகள் மட்டுமின்றி சாபங்களும் விலகி விடும்.. இந்த வழிபாட்டை தொடர்ந்து 8 வாரம் தேய்பிறை அஷ்டமி திதிகளில் செய்ய வேண்டும்.. அப்படி செய்தால் சாபங்கள் மற்றும் தோஷங்கள் விலகி விடும் என்பது ஐதீக உண்மை..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..