தொடரும் பாலியல் வன்கொடுமை..!! 5 ஆண்டுகள் தண்டனை..!! நடிகர் சங்கம் வெளியிட்ட 7 தீர்மானங்கள்..!!
பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்டிருபவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் கட்டாயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்படாது என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது…
மலையாள சினிமாவில் பேர் அதிர்வை ஏற்படுத்தி தற்போது பேசுபொருளாகியுள்ள ஒரு சம்பவம் தான் மலையாள நடிகைகள் பாலியல் வன்கொடுமை.. மலையாள நடிகர்கள் மீது எழும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதற்காக ஹேமா கமிட்டி என்ற ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி பேசி வருகின்றனர்..
தமிழ் சினிமாவிலும் இப்படி ஒரு கமிட்டி அமைக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தென்னிந்திய நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘SIAA-GSICC ‘ கமிட்டி என்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக 7 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றபடுள்ளது..
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1. பாலியல் துன்புருதலால் பாதிக்கபட்டவர்கள் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றம் சாட்டினால் விசாரணை செய்து அவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சினிமா துறையில் இருந்து 5 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்படுவார்கள்
2. பாதிக்கபட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நடிகர் சங்கம் செய்துகொடுக்கும்..
3. பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் குறித்து புகார் அளித்தால் முதலில் அவர்களுக்கு எச்சரிக்கை விடப்படும்., அதையும் அவர்கள் பொருட்படுத்தாவிட்டால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..
4. இதுபோன்ற இச்சைகளை சந்திக்கும் பெண்களுக்காகவே நடிகர் சங்கம் தனியொரு தொலைபேசி எண்ணை வைத்துள்ளது.. தற்போது இ-மெயில் மூலம் புகார் அளிக்கும் வசதியையும் கொண்டு வந்துள்ளது..
5. பாதிக்கபட்டவர்கள் கமிட்டியிடம் புகார் அளித்தாலே உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதற்காக பிரத்யேக சேனல்களுக்கோ அல்லது யூடியுப்பிற்கோ பேட்டி அளிக்க உரிமையில்லை..
6. அப்படி புகார் அளித்த பின் உங்களை அவதூறாக பேசினாலோ அல்லது குடும்பத்தை மிரட்டினாலோ உடனே சைபர் கிரைமில் புகார் அளித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் கமிட்டி செய்துக்கொடுக்கும்..
7. இனி கமிட்டி அடுத்தடுத்து நடக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணித்து செய்லபடும் என தெரிவித்துள்ளது..
மேலும் மேற்கண்ட அனைத்து தீர்மானங்களும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நிரைவேற்றபட்டுள்ளது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..