வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருக இதை செய்ய மறக்காதீங்க..!!
வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாக்ஷ்ம் பெருகுமாம்.., விஷணுவின் அம்சமாக இருக்கும் நெல்லி மரத்தில்.., மஹாலக்ஷ்மி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயர் உண்டு. லட்சுமி குபேரனுக்கு உரிய மரமாகவும் இது திகழ்கிறது.., நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் அதிகம் நிறைந்திருக்குமாம். எந்த விதமான தீய சக்தியும்.., நெல்லி மரம் இருக்கும் வீட்டை நெருங்காது என பல ஆன்மீக வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் எவ்வித வழிபாடுகள் செய்யலாம் என்றும் பார்க்கலாம்.
* நாள்தோறும் துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி மூன்று முறை வளம் வர வேண்டும்.
* இல்லம் தோறும் காலை வேளையில் சுப்பிரபாதமும் மற்றும் மாலை வேளையில் விஷ்ணுவின் சஹஸ்ர நாமமும் ஒளிக்க வைக்க வேண்டும். எந்தெந்த வீடுகளில் இந்த இறைவன் பாடல்கள் காலை மற்றும் மாலை வேளையில் ஒலிக்கிறது அந்த வீடுகளில் செல்வம் செழித்து இருக்கும்.
* வாய் இல்ல ஜீவன்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். முக்கியமாக பசுக்களுக்கு காரணம் பசுவில் குபேரன் குடி இருப்பாராம்.
* வீட்டின் பூஜை அறையில் சங்கு, மற்றும் தாமரை பூ வைத்து வணங்கலாம்..,
* வீட்டிற்கு வெளியே நெல்லிமரம் வைக்கலாம்,
* வீட்டின் வாசற்படியில் சாணி தெளித்து கோலம் போடலாம்..,
* தினமும் காலை எழுந்தவுடன்.., உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம் அல்லது இறைவனின் உருவப்படம் பார்க்க வேண்டும்.
* செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பஞ்ச முக விளக்கு ஏற்ற வேண்டும். அதாவது ஒரு விளக்கில் (குத்து விளக்கு ) ஐந்து திரிகள் வைத்து விளக்கு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் சிறந்த பலன் அளிக்கும்.
* மாலை ஆறு மணிக்கு விளக்கு ஏற்ற வேண்டும்.
* எந்த வீட்டில் பெண் உயர்வாக நடத்தப் படுகிறாளோ அந்த இடத்திலேயே திருமகள் இல்லத்தில் குடியேறி வீட்டில் இன்பம் பெறுக செய்வார்கள் என்பது உண்மை.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..