உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..! களத்தில் மதிமுகம்..!!
திருவண்ணாமலை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் மிக அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால்பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எல்.ஆர் நகர் பகுதியில் இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான பசு மாடு மேய்ச்சலுக்கு வரும் போது அருகே உள்ள உயர் மின்னழுத்தம் கம்பத்திலிருந்து மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்தது.
இதுகுறித்து பேரணாம்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயர் மின்னழுத்த கம்பத்திலிருந்து மின்சாரம் தாக்கியதால் தான் பசுமாடு உயிரிழந்தாக அப்பகுதி மக்கள் காவல்துறையிடமும், மின்வாரிய ஊழியர்களிடமும் நியாயம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ உமா மகேஸ்வரி உடனுறை சுயம்பு நாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சிவனின் திருமேனியின் மீது சூரிய ஒளி கதிர்கள் சிவனை வழிபடும் அரிய நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இந்த தகவலை அறிந்ததும் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து மெய்சிலிர்த்து சுவாமியை வழிபட்டனர். மேலும் சூரியக் கதிர்கள் வழிபடும் நிகழ்வை முன்னிட்டு கருவறையில் இருக்கும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மங்கல தீபராதனைகள் ஆகியவை நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, புதுப்பேட்டை, கந்திலி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை மற்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் காலை முதல் சுட்டெரித்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த நிலை உருவானதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளி அருகே உள்ள கழனி காட்டூர் கிராமத்தில் அழகேசன் மற்றும் ஓவியா ஆகிய இருவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமணத்திற்கு ஓவியாவின் பெற்றோர் சீதனமாக தந்த பசு மாடு தற்போது கர்ப்பம் தரித்ததுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக கழனி காட்டூர் கிராமத்தில் உள்ள உறவினர்கள் நண்பர்கள் என அனைவரையும் அழைத்து பசு மாட்டிற்கு வளைகாப்பு நடத்தினார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் 70 ஆண்டுகளாக கந்தூரி திருவிழாவை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மதனல்லிணக்கத்தோடு நடைப்பெற்ற அசைவ விருந்தில் அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொது மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி கலந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்…