நெற்றியில் திலகம் வைப்பது ஏன் தெரியுமா..?
ஆன்மீகத்தில் ஞானக்கண் திறப்பதற்காக நாம் நெற்றியில் திலகம் வைக்கிறோம். அறிவியலின் படி
* சந்தனம் குளுமையை கொடுக்கும்,
* விபூதி சருமத்தை சுத்தம் செய்யும்,
* குங்குமம், மஞ்சள், ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
* மேலும் நெற்றியில் இடும் திலகம் முகத்தின் அழகை இன்னும் அழகாக்கும்.
கடவுளுக்கு எடுக்கப்படும் ஆரத்தியில்..?
இறைவனுக்கு எடுக்கப்படும் ஆரத்தியில் குங்குமத்தை கலக்க வேண்டும். மனிதர்களுக்கு திருஷ்டி கழிக்க பயன்படும் ஆரத்தியில் மட்டுமே சுண்ணாம்பை கலக்க வேண்டும்.
கருடனை தரிசனம் செய்தபின் கிடைக்கும் பலன்கள்..!!
* கருடனை தரிசனம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்,.
* ஞாயிற்றுக் கிழமையன்று கருடனை தரிசித்தால் நோய்கள் நீங்கும்.
* திங்கள், செவ்வாய் கிழமைகளில் தரிசனம் செய்தால் துயரங்கள் நீங்கும் .
* மற்ற நாட்களில் தரிசனம் செய்தால் பில்லி சூன்யம் பாதிப்புகள் நீங்கும். என்பது ஐதீக உண்மை.
Discussion about this post