சனிக்கிழமை இறைவன் வழிபாடு..!!
சனிகிழமை என்றாலே மிகவும் விசேஷமானவர் “பெருமாள்” பெருமாளை வணங்கினால் செல்வம் செழிக்கும்.., செல்வந்தர்கள் ஆவார்கள் என்பது ஐதீக உண்மை. ஆனால் அவரின் முழு அருள் கிடைக்க அவரை எப்படி வணங்க வேண்டும்.., என்ன வழிபாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றி தெரியுமா..?
சனிக்கிழமை தோறும் வெங்கடேச பெருமாளிர்க்கு விரதம் இருந்து, கோவிலுக்கு சென்று துளசி மாலை வாங்கி தரிசனம் செய்து வழிபாட்டால்.. பணம் வரவு அதிகரிக்கும்.
வாரம்தோறும் கோவிலுக்கு சென்று வழிபட முடியாத பக்தர்கள், வீட்டில் விளக்கு ஏற்றி.., பெருமாளுக்கு பிடித்த லட்டு, புளியோதரை, தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், சுண்டல் ஏதேனும் செய்து படையல் இட்டு வணங்கி வந்தால் செல்வம் செழிக்கும்.
வாரந்தோறும் தொடர்ச்சியாக சென்று வழிபட்டால் கடன் சுமைகள் தீரும்.
சுய தொழில் செய்பவர்கள் பெருமாள் படத்திற்கு முன் காசு வைத்து வழிபட்டால் பணவரவு அதிகரிக்கும்.
பெருமாளின் புகை படத்திற்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி.., தீப ஆராதனை செய்து, நைவைத்தியம் படைத்தால்.., வீட்டில் இருக்கும் தீய வினைகள் நீங்கி விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து.., படித்திடுங்கள்.