மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியப் போக்கில் எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பொறுப்பை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்காதீங்க. உங்களுக்கு ஒரு வேலை கொடுத்தால் அதை நீங்கள் தான் பொறுப்போடு செய்து முடிக்க வேண்டும். கண்மூடித்தனமாக அடுத்தவர்களை நம்பினால் ஏமாற்றம் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை எடுக்கலாம். முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். சொந்தத் தொழிலில் புதுசாக கடன் வாங்கி விரிவுபடுத்துவது, வேலை செய்யும் இடத்தில் புதிய முயற்சிகளை செய்வது போன்ற நல்ல காரியங்கள் வெற்றியை கொடுக்கும். பேச்சு திறமையால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்தோஷம் நிறைந்த நாளாக அமையப் போகின்றது. நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனைவிக்கு தேவையான ஆடம்பரமான பொருட்களை பரிசாக வாங்கி கொடுத்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் மரியாதை கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நிறைய எதிர்பார்க்கக் கூடாது. உங்களுடைய வேலைகளை நீங்கள் செய்து கொள்ள வேண்டும். வேலைக்கு உண்டான பாராட்டு கிடைக்க வேண்டும், புகழு கிடைக்க வேண்டும் என்று கனவு காணாதீர்கள். சில பேருக்கு மன குழப்பம் இருக்கும். சிலருக்கு எந்த முடிவை எடுக்க முடியாத தடுமாற்றமும் இருக்கும். புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடவும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக அமையப் போகின்றது. எல்லா வேலையையும் சுறுசுறுப்பாக முடித்து விடுவீர்கள். பெயர் புகழ் கிடைக்கும். சொந்த தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். எதிர்பாராத காண்ட்ராக்ட் ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு தன்னம்பிக்கை யான நாளாக இருக்கப் போகின்றது. சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று போராடி வெற்றி காண்பீர்கள். மேலதிகாரிகளை பார்த்து பயப்பட மாட்டீங்க. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் உங்களுடைய பேச்சு அடுத்தவர்களை வியக்க வைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு கொஞ்சம் பணிவோடு பொறுமையோடு அடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மேலதிகாரிகளிடம் பேசும்போது கூடுதல் கவனம் தேவை. வார்த்தைகளை விடாதீங்க. புதிய வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு. உங்களால் எதை செய்ய முடியுமோ அதை மட்டும் சொல்லுங்கள். வாய் சவடால் விட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கப் போகின்றது. சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விவசாயிகளுக்கு இந்த நாள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நெருங்கிய நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வாரா கடன் வரும் வசூலாகும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். கையில் செலவுக்கு காசு இருக்காது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சில சமயங்களில் நிறைய முன்கோபம் வரும். பொறுமையை இழக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆனாலும் கோபப்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சுமாரான நாளாக தான் இருக்கப் போகின்றது. எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் ஒரு பின்னடைவு ஏற்படும். நீங்கள் நினைத்தது நடக்காததால் கொஞ்சம் மனசோர்வும் ஏற்படும். கவலைப்படாதீங்க. குலதெய்வத்தை நினைத்து இந்த நாளை தொடங்கினால் எல்லாம் நன்மையே நடக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு உயர்ந்த சிந்தனைகள் இருக்கும். பக்குவமான உங்கள் பேச்சும் நடவடிக்கைகளும் அடுத்தவர்களை கவரும். இன்றைக்குத்தான் உருப்படியாக சில விஷயங்களை தொடங்கப் போகிறீர்கள். குடும்பத்தின் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து நல்ல முடிவையும் எடுப்பீங்க. வாழ்க்கை துணையிடம் நல்ல பெயர் வாங்க வாய்ப்பு உள்ளது.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்தோஷமான நாளாக இருக்கப் போகின்றது. கையில் பணவரவு இருக்கும். சந்தோஷமாக செலவு செய்வீங்க. வழக்கம் போல தான் சேமிப்பை மனதில் வச்சுக்கோங்க. மாத கடைசியில் திண்டாட்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இருக்கக் கூடாது. சொல்லும், செயலும், சரியாக இருந்தால் தான் வாழ்க்கையில் முன்னேற்ற முடியும் என்ற வேத மந்திரத்தை மனதில் நிறுத்தினால் நீங்கள் வெற்றி பெறலாம்.