பொதுவாக காய்கள் என்றாலே சிறந்தது தான், ஒரு ஒரு காய்களுக்கும் ஒரு ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. தொடர்ச்சியாக செய்து வந்தால் அதன் பயனை நாம் முழுமையாக பெற முடியும்.
மிக சிறந்த காய்களில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம், சுரைக்காய் என்பது பொதுவாக நீர் சத்து அதிகமாக இருக்கும் காய்களில் ஒன்று இதை சாப்பிடும் பட்சத்தில், உடல் சூடு வெப்ப னாய் பிரச்சனைகள் ஏதும் வராது. மேலும் சிலருக்கு சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் இருக்கும் அதனால் தொடர்ந்து அதில் அவதிபடும் வருகிறவர்கள் தொடர்ந்து சுரைக்காயை ஏதேனும் ஒரு உணவாக சேர்த்துக்கொள்ளும் பொது சிறுநீர் தொடர்பான பிரச்சனைகளை முற்றிலும் குறைக்கும்.
பொதுவாக பல் பித்தம் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர் அவர்கள் சுரைக்காயை மதியம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடலில் பித்தத்தின் அளவு சமநிலை அடையும். மேலும் சுரைக்காய் உடலில் உள்ள வலிமையை அதிகரிக்கவும், நரம்புகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் உடல் சோகையையும் போக்கும். இந்த காய்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் குடலில் இருக்கும் புண்களையும் ஆற்றும் தன்மை உடையது. குறிப்பாக மூல நோய்களுக்கும் சுரைக்காய் மிக சிறந்த மருந்தாக இருக்கிறது.
சுரைக்காயின் உட்புறமட்டுமின்றி அதன் தொழில் கூட மருத்துவ குணங்கள் இருக்கிறது. அந்த தோள்களை வெட்டி உடலில் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் எரிச்சல்கள் குறையும். இது மட்டுமின்றி கண் பார்வை குறைபாடுகளுக்கும் சுரைக்காய் பயனுள்ளதாக உள்ளது சுரைக்காயை நெருப்பில் சுட்டு தேனில் கலந்து சாப்பிட்டு வரும் பொது கண் பார்வை மேம்படும். இந்த காயின் இலைகளை நீரில் ஊறவைத்து குடித்தாலே வீக்கம், நீர்க்கட்டு, பெருவயிறு வராமல் தடுக்கலாம். மேலும் சுரைக்காய் மஞ்சள் காமாலை நோய்க்கும் பயன்படுத்தபடுகிறது.
இவ்வளவு சிறப்புக்கள் உள்ள இந்த சுரைக்காய்களை வரம் ஒருயாவது தொடர்ந்து உட்கொண்டு வருவதால் உடலில் பல பிரச்சனைகளை மருந்துகளே இல்லாமல் சரி செய்ய முடியும். வரும் முன் காப்பதும், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வதை சம்பாரிப்பதும் நம் கைகளில் தான் இருக்கிறது.