வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் ஒரு புயல் கோடா உருவாகாமல் இருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகினாலும் அது புயலாக வலுப்பெறாமல் சென்றது இதனால் மக்கள் சற்று நிம்மதியில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி கற்றலாயுத மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி வந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இதற்கு ஐக்கிய அரபு நாடு மாண்டஸ் என்ற பெயரை பரிந்துரைத்து அதற்கு மாண்டஸ் புயல் என்று பெயர் சூட்டப்பட்டது. நேற்று இரவு மண்டல் புயல் அதி தீவிர புயலாக வலுபெற்றது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கும் மீனவர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள் தோறும் பேரிடர் மீட்பு படை விரைந்து செயற்படும் வருகிறார்கள். மேலும் சென்னை உள்ளிட்ட துறைமுகங்களில் 6ம் என் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த புயல் இந்த நள்ளிரவில் புதுவை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையில் மாமல்லபுரம் கடற்கையில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையிலிருந்து 270 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருக்கும் இந்த புயல் மணிக்கு 13 கிமீ வேகத்தில் தமிழகம் மற்றும் புதுவையை நோக்கி வருகிறது. இதனால் மாமல்லபுரம் மற்றும் இசிஆர் சாலையில் உள்ள கடற்கைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது மேலும் தரைமட்டத்திலிருந்து 14 அடி உயரம் வரை அலைகளும் எழும்புவதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயல் தீவிர புயலாக வலுவிழக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்பொது சுமார் 100 கிமீ வேகத்தில் சூறை காற்று வீசும் என்றும் புயல் கரையை கடப்பதற்கு முன் மற்றும் புயல் கரையை கடந்த பின்னும் 60 முதல் 85 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் முக்கிய செம்பரம்பாக்கம், புழல் உள்ளிட்ட முக்கிய ஏரிகள் திறந்துவிடப்படுகிறது.