பிறந்த குழந்தைக்கு உரம் விழாமல் இருக்க இதை செய்யுங்க..!
குழந்தை பராமரிப்பு என்பது முக்கியமான ஒன்று எவ்வளவு தான், நாம் குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொண்டாலும் சுற்றி இருக்கும் சிலரால் கூட பிரச்சனை ஏற்படக் கூடும். அதில் ஒன்று தான் “உரம் விழுவது”. இந்த உரம் எப்படி விழுகிறது, அதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
குழந்தையின் தலை நேராக நிற்காத போது, கழுத்து நரம்பு வளர்ச்சி அடைந்திருக்கும். குழந்தையின் தலையை சரியாக பிடிக்க வில்லை என்றால் இந்த பிரச்சனை ஏற்படும்.
குழந்தைக்கு உரம் விழுந்தால்.., அதை கை வைத்தியத்திலேயே சரி செய்ய நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
சற்று கனமான புடவை அல்லது போர்வையை எடுத்து இருபக்கமும் இருவர் பிடித்துக்கொண்டு நடுவில் குழந்தையை படுக்க வைக்க வேண்டும், குழந்தையின் தலை மற்றும் கழுத்து இரண்டுமே புடவையில் படும்படி இருக்க வேண்டும். பின் மெல்ல மெல்ல மேலும் கீழுமாக உருட்ட வேண்டும்.
இவ்வாறு செய்தால் உரம் நீங்கி விடும்.
முக்கியமான ஒன்று குழந்தைக்கு உரம் எடுத்தவுடன் அழத் தொடங்கி விடுவார்கள். அழுகை நிப்படுவதற்காக தாய்ப்பால் மட்டும் கொடுத்துவிடக் கூடாது. அப்படி கொடுத்தால் அவர்களுக்கு அது வாந்தி உணர்வை ஏற்படுத்தி விடும்.
குறைந்து உரம் எடுத்து 40 நிமிடம் கழித்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.