திருமணத்தடை நீக்கும் தேவநல்லூர் ஸ்ரீ சோமநாதர்..!!
திருநெல்வேலி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது திருநெல்வேலி அல்வா.., குற்றாலம் மற்றும் நேந்திரம் பழம் சிப்ஸ்.., ஆனால் அதை விட புகழ் மிக்க பல.. நம் திருநெல்வேலியில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து பிரான்சேரி வழியாக களக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது தேவநல்லூர்.
தேவநல்லூரில் புகழ் மிக்க ஸ்ரீகோமதி அம்மாள் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீகோமதி அம்மபாள் சமேத ஸ்ரீ சோமநாத அம்மனின் சிறப்பே திருமணத்தடை நீக்கி பக்தர்களுக்கு திருமண வரன் அளிக்கிறார். புகழ் மிக்க ஸ்ரீகோமதி அம்பாள் சமேத ஸ்ரீ சோமநாத அம்மன் கோவில் திருநெல்வேலி பச்சையாற்றங்கரையில் அமைந்துள்ளது.
பாஞ்சலிங்க தளங்களில் ஒன்றாக போற்றப்பட்டு வரும் இத் திருத்தலம்.., வருகின்ற ஜூலை 15ம் தேதி நடக்க இருக்கும் மஹாபிறதோஷ வழிபாட்டில் திருமணதடை உள்ளவர்கள்.., ஜாதகத்தில் கிரகங்கள் மாற்றத்தால் திருமணதடை விலகி போவர்கள், இந்த மஹாபிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ளலாம்.
மாங்கல்ய வரன் கிடைக்க :
களத்திர தோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து கிழக்கு நோக்கி அருள் பாலித்து கொண்டிருக்கும் சோமணாதரையும், தெற்கு நோக்கி இருக்கும் ஸ்ரீகோமதி அம்பாளையும்.., ஒரே நேரத்தில் பெயர், ராசி, நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணவரன் கிடைக்கும்.
மஹா கும்பாபிஷேகம் :
இத் திருக்கோவிலில் சிறப்பு மஹா பிரதோஷம் வழிபாடு நடைபெற உள்ளது. எனவே வருகிற ஜூலை 15ம் தேதி மஹா பிரதோஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட உள்ளன. அன்று அத் திருத்தலம் முழுவதும் 1008 தீபங்களால் ஏற்றப்பட்டு மற்றும் 1008 செவ் இளநீரால் அபிஷேகம் செய்யப்படும் அன்று மாலை 6:30 மணிக்கு.., செவ்வாய் தோஷம், மூல நட்சத்திரம், நாக தோஷம், கிரங்களால் மாற்றம் அடைந்தவர், திருமண தடை விலகி நிற்பவர்.., என அனைவரும் அன்று 1008 தீபங்கள் தொட்டு வலிபட்டு அம்மனை தரிசனம் செய்தால்.., அனைத்து தடைகள் நீங்கும் என்பது பல ஆண்டுகள் உண்மை.., இது அந்த கோவில் ஆண்டு ஆண்டு காலமாக செய்யப்பட்டு வரும் வழிபாடு மட்டுமின்றி.., ஐதீக உண்மையும் கூட.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post