சந்திராயன் 3 – பூமி முதல் நிலவு வரை எப்படி செயல்படுகிறது..?
சந்திராயன் 3 விண்கலத்தை வருகின்ற ஜூலை 14ம் தேதி அன்று இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது, நிலவில் சந்திராயன் 3 தரை இறங்க முக்கியமான 10 கட்டடங்கள் இருக்கின்றன. இந்த பத்து கட்டடங்களின் கட்டமைப்பு களும் வெற்றிகரமாக செயல்பட்டால் தான், சந்திராயன் 3 நிலவில் தரை இறங்கும்.
சந்திராயன் 3 விண்கலத்தில் என்ன கட்டமைப்புகள் இருக்கும்.., அவற்றை கொண்டு செல்லும் ராக்கெட் எப்படி செயல்படும் என்பது பற்றி பார்க்கலாம்.
சந்திராயன் 3 விண்கலம் :
இந்த விண்கலம் 3 பகுதிகளை கொண்டிருக்கும் அதில் முதல் பகுதி ஒரு கார் பொம்மை எப்படி இருக்குமோ அதை போல் வடிவமைப்பை கொண்டிருக்கும். அதற்கு ஊர்திக்கலம் என்று பெயர். இந்த ஊர்திக்கலம் இயக்க நிலையில் இருக்கும் போதோ அல்லது நகரும் பொழுதோ நிலவின் மேற்பரப்பில் ரசாயன பாகுப்பாய்வை கொண்டிருக்கும்.
இந்த ஊர்திக்கலத்தை தரை இறங்கிக் கலம் என்று சொல்லுவார்கள், இது நிலவின் தரை பரப்பில் மென்மையாக.., பாதிப்புகள் ஏதுமின்றி அதன் உள் இருக்கும் ஊர்திக்கலத்தை வெளியே அனுப்பிவிடும்.
இந்த இரண்டு பகுதியும் சேர்ந்து, மூன்றாவது பகுதியான உந்துக்கலம் என்ற பகுதி தலைக்கு மேல் இருக்கும், இந்த பகுதி நிலவின் சுற்று வட்டப்பாதையில் 100கிமீ தொலைவு வரை தரையிறங்கி கலம், ஊர்திக்கலம் என இரண்டையுமே கொண்டு செல்லும்.
இந்த மூன்று அமைப்பும் சேர்ந்துதான் “விண்கலம்“, சந்திராயன் 3 விண்கலம் தான் எம்.வி.எம் 3 என்ற ராக்கெட்டின் தலைக்கு மேல் ஒரு கலசம் போல் வைக்கப்பட்டிருக்கும்.
சந்திராயன் 3 விண்கலம் விண்வெளியை அடைந்த பிறகே உச்சியில் கூம்பு போல் இருக்கும் இந்த பகுதி வெளியே வரும்.
சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் :
ஜி.எஸ்.எம்.எல்.வி மார்க் 3 என்பது இதற்கு முன் விண்வெளிக்கு சென்ற சந்திராயன் மற்றும் விண்கலங்களை சுமந்து சென்ற ராக்கெட்டுகளின் பெயர்கள் ஆகும்.
இந்த வகையான ராக்கெட்டுகள் மூன்று அடுக்குகளை கொண்டிருக்கும் அதன் இருபுறமும் இரண்டு தூண்களை போல் S200 என்ற இன்ஜின் இருக்கும்.., அதற்கு தேவையான ஏரி பொருட்களை தக்க வைத்திருக்கும்.
இவை இரண்டிற்கும் நடுவே திரவ எரிபொருள் என்ற ஒற்றை இன்ஜின் செயல்படும் அதற்கு L110 என்று பெயர்.
அதற்கு மேலே கருப்பு பட்டையை போல ஒரு பகுதி இருக்கும் அதற்கு அவற்றை குளிரூட்ட உறைகுளிர் இன்ஜின் செயல்படும்.
உறைகுளிரில் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் இரண்டுமே தண்ணீரை போன்று திரவமாக மாறிவிடும். அவை இரண்டும் அவற்றில் இருப்பதால் தான் அவை எரிபொருளாக பயன் படுத்தப்படுகிறது.
முதலில் திட எரிபொருள் இன்ஜின்கள் எரிந்து ராக்கெட்டை மேலெழும்பச் செய்யும், பின் மேலே சென்றதும் கீழே கழன்று விழுந்துவிடும். இரண்டாவதாக திரவ எரிபொருட்கள் எரிந்து மேலே மேலே செல்லும் பொழுது.., ஒவ்வொன்றாக கழன்று கீழே விழும். இந்த இரண்டு செயல்பாடும் ராக்கெட்டை விண்வெளிக்கு கொண்டு செல்லும்.
இந்த செயல்முறைகளை எம்.எல்.வி.3 ராக்கெட் பூமியின் தரை பரப்பில் இருந்து 170 கிமீ உயரத்திற்கு சந்திராயன் 3 விண்கலத்தில் கொண்டு சென்று நிறுத்தி விடும். இதுவே அதன் முதல் கட்ட வேலை.
விண்வெளிக்கு சென்ற பின் :
விண்கலம் புவியின் தரை பரப்பில் இருந்து 170 கிமீ உயரத்திற்கு சென்ற பின்.., விண்வெளியில் அதற்கு ஓர் உந்துதலை கொடுக்கும் .., எனவே தான் அவை பூமியின் நீள் வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. அந்த நீள்வட்ட பாதைகள் பூமிக்கு மிக அருகில் இருக்கும் பொழுது தரை பரப்பில் இருந்து 170 கிமீ தூரத்திற்கு மேல் விண்கலம் இருக்கும்.., அதுவே தொலைவில் இருந்தால் 36,500 கி.மீ. தூரத்தில் இருக்கும்,
விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திராயன் 3 விண்கலத்தை இந்த பாடத்தியில் சுற்ற வைப்பது தான் இதன் இரண்டாம் கட்ட வேலை.
புவியின் நீள் வட்ட பாதையில் சுற்றுவது எப்படி..?
புவியின் நீள் வட்டப்பாதையில் சுற்றினால் மட்டும் போதாது அந்த பாதையில் பூமிக்கு நெருக்கமான தூரத்தில் இருந்து விண்கலத்தை நெடுந்தொலைவிற்கு தள்ளி விட்டால் மட்டுமே நிலவின் சுற்று பாதைக்கு இவை செல்ல முடியும். நிலவின் சுற்று பாதைக்கு இவற்றை கொண்டு செல்ல வைப்பது இதன் மூன்றாம் கட்ட வேலை.
சந்திராயன் 3 விண்கலம் பாதை மறைவிடாமல் தடுக்க :
நான்காவது கட்டமாக பூமி மற்றும் நிலா இரண்டையும் கற்பனையாக ஒரே நேர்கோட்டில் வைத்துக்கொள்ளும். பூமி யை விட, நிலவுக்கு குறைந்த அளவு ஈர்ப்புவிசை இருக்கும்.
இரண்டுக்கும் இடையே சமமான ஈர்ப்பு விசை இருக்க வேண்டும். அந்த சம ஈர்ப்பு விசை புள்ளி, நிலவில் இருந்து 62,630 கிமீ தொலைவில் அமைந்து இருக்கும். அந்த புள்ளியை சந்திராயன் 3யில் விண்கலத்தில் செலுத்துவது தான் நான்காவது கட்டம்.
புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து சந்திராயன் 3 விடுபட :
சந்திராயன் 3 விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் போதெல்லாம்.., தூரத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தொலைவாக செல்லும். பூமியை விட்டு தொலைவாக சென்றாலும், பூமியின் ஈர்ப்பு விசை பிடியிலே இருக்கும்.
பூமியை சுற்றி வந்த விண்கலத்தை நான்காவது, ஐந்தாவது கட்டமாக பூமிக்கும் நிலவுக்கும் இடையே சமமாக இருக்கும் புள்ளியை செயல்முறைகள் மூலமாக விண்கலத்திற்கு அனுப்பிவிடும்.
அதாவது மேல் நோக்கி எறியப்படும் கல் மீண்டும் கீழே வருவது போல்.
நிலவின் நீள் வட்டப்பாதையில் விண்கலம் :
ஆறாவது கட்டத்தின் முடிவில் சந்திராயன் 3 நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் வந்து விடும். அப்போது அதை நிலவின் நீள் வட்ட பாதையில் சுற்ற வைக்க வேண்டும். அப்படி சுற்ற வைக்காமல் இருந்தால் நிலவின் அருகில் சென்று பின் விலகி விண்வெளிக்கு சென்று விடும்.
அப்படி செல்லாமல் இருக்க வேண்டுமானால் அவற்றை நெறிவு படுத்தி நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்ற வைக்க வேண்டும், விண்கலத்தில், உந்துகலம் மற்றும் தரை இறங்கி கலம் என இரண்டு முக்கிய கலங்கள் இருக்கின்றன. அதை தரையிறக்கி 100 கிமீ முதல் 30கிமீ வரையிலான நீள்வட்ட பாதையில் சுற்ற வைக்க வேண்டும்.
நிலவில் சந்திராயன் 3 தரை இறங்கும் விதம்..?
இதற்கு முன் இருக்கும் எட்டு கட்ட செயல்முறைகளும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே , அடுத்த கட்டம் சிறப்பாக செயல்படும். நிலவில் சந்திராயன் 3யை தரை இறக்குவது தான் சவாலான ஒன்று.
ஒன்பது கட்ட செயல்முறைகளும் அவை செய்லபட எடுத்துக் கொள்வதற்கான நேரம் 15 நிமிடங்கள் மட்டும் தான், ஆனால் அந்த 15 நிமிடத்தில் இவை செயல்பட்டு வெற்றியை கொடுக்கும். இருப்பதிலேயே மிகவும் கடினமான அம்சம் இது.
கடந்த சந்திராயன் 2 திட்டம் தோல்வி அடைந்ததும் இந்த கடைசி செயல்பாட்டில் தான், தரையிறங்கி கலத்தில் நான்கு குட்டி ராக்கெட்டுகள் எரித்து தரையிறங்கி கலத்தை மெல்ல மெல்ல தரை இறக்க வேண்டும். இந்த கட்டத்தில் அவை தோல்வி அடைந்தன.
எனவே இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை தரையிறங்கி கலத்தின் இதற்கு முன் நடந்த காரணங்கள் கண்டறிந்து பல மாற்றங்கள் செய்துள்ளனர். எனவே இந்த முறை பத்திரமாக தரை இறங்கும் என கூறுகின்றனர்.
இந்த பத்து கட்டமும் முறையாக செயல்பட்டால் மட்டுமே மட்டுமே சந்திராயன் 3 திட்டம் முழு வெற்றியை பெற்று விடும். இந்த நீண்ட பயணம் ஜூலை 14ம் தேதி தொடங்க உள்ளது.
Discussion about this post